நிதி செய்தாரை பணிகுவர்
மாமனே எந்த நெறியினால் அதை செய்திடினும் வெறும் கூற்றுகே அற நூல்கள்
கூறும் தர்மமெல்லாம் என்றானே துரியோதனன், பாரதி மூலமாக அது எத்துனை
உண்மை! எந்த போதி மரத்தடியில் இந்த ஞானம் என்று கேட்காதீர்கள் நண்பர்களே.
இது மரத்தடி ஞானம்அல்ல, பார்லரில் உதித்த ஞானம்.
என் மருமகள் விஜியின் தொடர்ந்த அன்புத் தொல்லை, என் முதுகு வலிக்கு ஒரு தற்காலிக தீர்வாகவும், இந்த ஊரின் கடுங் குளிருக்கு இதமாகவும் இருக்கும் என்று விடாது எடுத்து கூறி என்னை கெஞ்சியும், மிரட்டியும், ஒரு மஜாசுக்கு சம்மதிக்க வைத்து அதற்குண்டான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து விட்டு, அவளுக்கு அலுவலகம் செல்ல வேண்டியிருந்ததால் பார்லருக்கு செல்வதற்கான வழிமுறைகள் அனைத்தையும் சொல்லி, என்னையும் என் கணவரையும் தனியே அனுப்பி வைத்தாள்.நீ வெள்ளைக் காரனையே வாங்கி உன் பையிலே போட்டுக்குவே என்று வேறு கூறி அட்டகாசமாக சிரித்தாள் .என் 'திறமை 'மீது அவ்வளவு நம்பிக்கை
குறிப்பிட்ட நாளில் நான் அங்கு சென்ற போது எனக்கு ஞாபகத்துக்கு வந்தது தான் பாரதியின் அந்த பாடல். சூரியனே அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் வெள்ளை பிரஜைகள், எனக்கு அடித்த சலாமும், குலாமும் எனக்கு வியப்பளித்தது .தர்ம சங்கடமாயுமிருந்தது . அது அவர்கள் தொழில் என்ற போதும்.
என் சிற்றறிவுக்கு எட்டிய வரை, இந்த உலகை ஆளுவது இரண்டே இரண்டு தான். ஒன்று ,எதிர் பார்ப்பில்லாத தூய அன்பு மற்றொன்று பணம். ஜாதி, இனம், மொழி, நாடு, நிறம் இவை போன்ற தடைகள் எதுவும் இந்த இரண்டுக்கும் இல்லை. ஆகவே மக்களே
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்.
எங்கிருந்தோ காந்தி புன்னகைத்தார்.